வாழ்க்கை
இந்த வாழ்க்கை போராட்டமா
நான் போகும் வழியெங்கும் முட்தோட்டமா
எங்கு
சென்றாலும் இங்த ஏமாற்றமா
வானம் இடியும் நேரம் நான் மட்டுமா
அங்கு நான் மட்டுமா
தொடு
தொடு என்று துன்பம்
என்னை ஏன் சொல்லுது
விடு
விடு என்று இன்பம்
என்னை ஏன் தள்ளுது.
கண்ணீரும்
இங்கில்லை , கண்கள் இல்ல
தேன்
தேடும் வண்டுக்கு , சின்ன பூ கூட முல்ல
(வாழ்க்கை)
பூக்கள்
வாசம் தெரியும்
ஆனால் பூக்கள் தெரியாதே
புன்னகை
ஓசை கேட்கும்
ஆனால் புன்னகை தெரியாதே
தொட்டு
பார்க்கும் கைகளுக்கு
பார்க்கத் தெரியாதே
சொந்தம்
பந்தம் யாவும் உண்டு
யாரும் இங்கில்லையே
நீ
தான் , நான் தான் , நாம் தான் என்று
எதுவும் நிலையில்லையே
(வாழ்க்கை)
எந்தன்
அறை மட்டும் இருட்டறையா
இது காலங்காலமும் என் தலைவிதியா
விழிகள்
பேசும் அந்த மொழிகள் ஏதுமில்லை
இது கண்ணீர் கதை தானோ
இல்லை கானல் கதை தானோ
(வாழ்க்கை)
வண்ணம்
இல்லா வாழ்க்கை உள்ளே
வசந்தம் என்பது எங்கோ
நிமிடம்
கூட அட நரகமாகும்
இந்த வாழ்க;கை ஏன் தானோ
(வாழ்க்கை)
இருளில்
ஓவியம் தெரியாதே
வலி வந்தால் தவிர புரியாதே
(வாழ்க்கை)
No comments:
Post a Comment