அடிக்கடி உன்னை நினைக்கையில்
என்னை ஏனோ மறக்கிறேன்
என்றோ உன்னை மறக்கையில்
என்னை நானே வெறுக்கிறேன்
இமைகள் மூடி திறக்கும் போதும்
உன் முகம் மட்டும் பார்க்கின்றேன்
எப்போதும் நான்
உனை நினைக்கின்றேன்
அதனால் தினம் தினம் தவிக்கின்றேன்
ஏன் என்னுள்ளே
நீ வந்தாய் சொல்
கார்காலம் ஒன்றை ஏன் தந்தாய் சொல்
விடு விடு என்றால்
கூட
உன் காதல் விடவில்லையே
அருகினில்
நானும் வந்தால்
உன் மௌனம் தொல்லையே
வருகின்ற காதாலை
மெளன அனணகளால்
நீ தடுக்கின்றாய்
மெளன தேசத்தின்
தேவதை போல்
ஏன் நீ நடிக்கின்றாய்
உன் மௌன கதவினை
திறக்க
ஏன் மறுக்கின்றாய்
மலருக்கு மௌனங்கள்
தெரியாதே
கண்ணாடிகடகு சுயநலம் கிடையாதே
உன் மௌனம் சம்மதமா
, இல்லை சங்கடமா
என் இறுதி ஊர்வலத்தில் , உந்தன் கால்தடமா
இதயத்தை உனக்கென
கொடுத்து விட்டேன்
கண்களில் காதலை
சுமந்து விட்டேன்
கண்ணீரில் பாடல்
எழுதி விட்டேன்
உயிரே ,
உனக்கென வாழ்கின்றேன்
இனியும் என்னடி
பதில் இருந்நால் சொல்லடி…
No comments:
Post a Comment