Sunday, 23 December 2012

பூவே பூவே பூவே பூவே



பூவே பூவே பூவே பூவே
நம் முதல் நாள் சந்திப்பு
     என் நெஞ்சில் தித்திப்பு
உன் கண்கள் அத்திப்பூ
     என் நெஞ்சில் ஏன் தவிப்பு
                           (பூவே...)
கன்னிப்பூ அட நீ தான்
     உனை காணும் கண்கள் நான் தான்
அட வானம் தேடும் உன்னை
     தினம் கேட்டுப்போகும் என்னை
பொய் சொல்லித் தானே போகிறேன்
      பைத்தியம் உன்னால் ஆகிறேன்
                                (பூவே...)
உன் மேனி மேற்பரப்பு
     அது நிலவின் பளபளப்பு
உன் கண்களின் கருகருப்பு
     என்னில் சிலுசிலுப்பு
                                (பூவே...)
ஏதேதோ நினைப்பு , வரும் தவிப்பு... அது துடிப்பு
     காதல் தரும் சுவைப்பு , அதன் ருசிப்பு , எந்தன் விருப்பு
                        

அட நீயும் எனக்கோர் சாமிதான்
     உன்னால் வாழும் என் பூமி தான்
                        (அட வானம்..)
                                   (பூவே...)
பூவே பூவே நீ பூமிக்கு புதுப்பிறப்பு
     உன்னால் ஆகிறதே இங்கு போட்டி அதிகரிப்பு
                                     (.....)
உன்னால் உன்னாலே நான் ஆனேன் சிவப்பு
     உன் பிம்பம் பட்டாலே , என் நெஞ்சில் அடைப்பு
தனித்தனியே போனாலும் நீ என் பக்க இணைப்பு
     ஒரு வாட்டி சொல்லி விடு நம் காதல் சிறப்பு
                                  (கன்னிப்பூ...)
                                           (பூவே...)

No comments:

Post a Comment