Sunday, 23 December 2012

தொடுவானம் தொட்டு



தொடுவானம் தொட்டு தொட்டு
     நீ என்னை விட்டு விட்டு
தூரத்தில் நீயும் போகாதே
     எனை விட்டு நீயும் போகாதே

மேகங்கள் முட்டி முட்டி
     மின்னல்கள் வருவது போலே
எனை நீயும்
 மோதிப் போகாதே
துணையின்றி பூமி கூட இல்லையே
      நீயின்றி நானும் இங்கு இல்லையே
                                     (தொடுவானம்)
என்ன செய்தால் காதல் தித்திக்கும்
     எந்த வார்த்தை என்னை மன்னிக்கும்
உன் கோபத்தில் எரிந்திடும் சருகை போல
     காணாமல் போனேனே
                                     (என்ன)
அடி நிலவே உயிரே கனவே களவே
     என் காயம் மாறாதோ
           உன் கோபம் தீராதோ
                                     (தொடுவானம்)

கட்டிய தாலி , வீசிட தானோ
     நான் கொண்ட அன்பு ,  தனிமைக்கு தானோ
உடல் இங்கு உண்டு
                உயி மட்டும் இல்லை
விட்டுச் சென்ற  உயிர்  தான்
     எனை வெறுப்பதும் ஏனோ
                                           (தொடுவானம்)
தெரியாமல் செய்தது பிழையா
     பிழைக்கேதும் இல்லை விலையா
விலை எந்தன் உயிர் தான் என்றால்
     தருவேன் உனக்காக
                                          (தொடுவானம்)

No comments:

Post a Comment