Sunday, 23 December 2012

உலகில் கோடி தெய்வமிருந்தாலும்



உலகில் கோடி தெய்வமிருந்தாலும்
                நீ தான் என் தெய்வம்
உலகில் எத்தனை சொந்தமிருந்தாலும்
நீ தான் என் தெய்வம்
அம்மா அம்மா உன்னை அறியா உள்ளம் சும்மா
சும்மா சும்மா அவர்கள் இருந்தும் வாழ்ந்தும் சும்மா
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அறிந்தேன் உன்னாலே
ஆண்டவன் தந்த அற்புதப் பரிசு நீ என்று
உணர்ந்தேன் மனதாலே
                                     (அம்மா அம்மா)

என் முதல் காவல் நீ , என் காவலனும் நீ
புன்னகை சிந்தும் பூவும் நீ
என் வீணை நீ  , என் விழியும் நீ
என் கருவறை காவல் தெய்வம் நீ
அம்மா,
உன்னாலே பிறந்தேன் நானே
உனக்காக வாழ்வேனே
உன் அன்பாலே நனைந்தேன் நானே
இனி சாதனைகள் புரிவேனே
                                     (உலகில்)

நிலவில் பாதி அம்மா
அந்த நிலவும் நீயே அம்மா
என் விழியில் ஈரம் கசிந்தால்
அது உடனே மறையும் சும்மா உன்னாலே

கருவறையில் உன் முகம் நான் பார்க்கவில்லையே
பார்த்திருந்தால் அங்கும் எனக்கு தனிமையில்லையே
தாயன்பு போலதொரு வேறொன்று இருந்திடுமா
                                           (உலகில்)
தாயின்றி யாரும் பிறப்பதில்லையே
தாய்மைக்கு ஈடு ஏதும் இல்லையே

No comments:

Post a Comment