இதயம் துடிக்குதே
(டப்பென்று) சட்டென்று
வெடிக்குதே
கண்களை மூடினால்
கனவுகள் மிதக்குதே
நிமிடங்கள் நிமிடங்கள்
குறையுதே
நினைவுகள்
உன்னால் பெருகுதே
கன்னி உந்தன் பூமுகம்
பூப்போல்
என்னில் பூக்குதே
தினம் பூக்குதே
எனை தாக்குதே உயிரே
(இதயம்)
பறக்கும் பட்டம்
போல
நீ பார்த்தால் நெஞ்சம் மேலே
தொட்டாஞ்சனிங்கி
போல
உள்ளம் சுருங்கி போகும் உன்னாலே
(…….)
விடுகதையாய் உன்னை
பார்ப்பதும்
விடை தருவாய் என்று கேட்பதும்
ஒருமுறை நீ தான்
பூப்பதும்
ஐ லவ் யு என்று சொல்லத்தான் தோன்றும்
உந்தன் அனுமதி
இன்றியே
கண்ணின் அலை கரை
கடக்குதே
அங்கும் இங்கும் உன்னை பார்க்குதே
நீ பார்த்தால்
போதும்
என் பாவங்கள் தீரும்
(இதயம்)
உச்சி முதல் பாதம்
வரை
உன் நினைவு வாழுமடி
உள்ளுக்குள்ளே
வாழும் காதல்
உன் பெயரை கூறுமடி
கற்பனைகள் போதுமடி
கண்கொண்டு பாருமடி
என் உயிர் கொஞ்சம்
போகுமுன்னே
என் உயிருக்குள் வாருமடி
(இதயம்)
No comments:
Post a Comment