போகும்
பாதையில்
ஓடும் கால்களுக்கிடையில்
ஓடும் ஒரு
ஜீவன்
கையில்
உயிரை
ஏந்தி
ஏதோ ஒரு
நம்பிக்கையில்
ஓடும்
எறும்பின்
மரணபயத்தின் கதறல்
யாருக்கும் கேட்பதும்
இல்லை
யாருக்கும் தெரிவதும்
இல்லை
மொட்டு
கருவறைக்குள்
சில காலம் தங்கி
வானத்தின்
வெண்மையையும்
பூமியின்
பசுமையையும்
ஓற்றைக்
கண் பார்வையில்
ரசித்து
மெல்ல மெல்ல
மலர்ந்து
வாசத்தின்
பாசையில்
தென்றலுடன் உறையாடி
வண்டுக்காக காத்திருக்கும்
மலரின்
ஆவல்
வாசக்கூந்தலில்
பூச்சூடும்
பெண்கள்
யாருக்கும் தெரிவதில்லை
கூடியோடி
விளையாடி
கூட்டத்தோடு கும்மாளமிட்டு
தாயின் மடியில்
குட்டித்
தூக்கமிட்டு
மீண்டும்
சிறகடித்து
பறந்து திரிந்த
கூண்டுப் பறவையின்
முனங்கல்
ஊரெல்லாம்
சுற்றும்
நல்ல உள்ளங்கள்
யாருக்கும் தெரிவதில்லை
இன்னும்
எத்தனையோ
சிலருக்கும்
பலருக்கும்
யாருக்கும் தெரியாமலே
No comments:
Post a Comment