Sunday, 23 December 2012

யார் பக்கம் நியாயம்



அன்னை   கொசுவர்த்தி  கொளுத்த
ஆயிரம்  சடலங்கள்  கீழே  விழுந்தன
ஆம்  அவை  கொசுக்கள்தான்

கொலை   செய்வது  பாவம் தான்
ஆனால்  நாம்  கொல்கின்றோம்
நம்  ஓர் உயிரின்  நலத்திற்காக

பெண்  கொசுக்கள்  மட்டுமே  இரத்தம்  உறிஞ்சுமாம்
தன்  சேய்கருவின்  நலத்திற்காக

கொசு  கடித்தவுடனே   நாம்  இறப்பதில்லை
ஆனால்  நாம்  அடித்தவுடன்  கொசுக்கள்  பிழைப்பதுமில்லை
இதில்  யார்  பக்கம்  நியாயம்

கொடிய  விலங்கு
உணவிற்காக  நம்மை  கொன்றால்
அது குற்றம்
நமது உணவிற்காக
நூற்றுக்கணக்கில்  உயிர்களைக்  கொல்வது  ( .கா  கோழி ,  ஆடு )
என்ன  சட்டம்
இதில்   யார்  பக்கம்  நியாயம்

புலி  பசித்தாலும்  புல்லைத்  தின்னாதாம்
புலி ஏமாந்தால்   நாம்   அதையும்  திண்போம்

உணர்வுகள்  என்பது  இறைவன்  படைப்பில்
வேறு  வேறா
பாசம் என்பது
நாம்   மட்டுமே  உண்ணும்   நெல்லுச் சோறா
மரணவலி   உயிர்களிடையே  வேறு வேறா

எறும்பு   தண்ணீரில்  விழுந்தாலும்   தன்   உயிரைக்  காக்க  போராடும்
மனிதன்   தண்ணீரில்  விழுந்தாலும்  தன்  உயிரைக்  காப்பாற்ற  போராடுவான்
இதில் யார்  மரணபயம்   பெரிது
வெறும்  திணை  மட்டுமே  நம்மிடம்  இருப்பது

இருந்தும்
இவ்வுலகில்
நீ  பெரியவன்  நான்  பெரியவன்
என்ற போட்டியில்
வலியவன்  சொன்னதே  சட்டம்
இதை கேட்பது
உயிர்  இருக்கும்   மட்டும்


No comments:

Post a Comment