வெண்ணிலவு பக்கம்
வந்தது
என் அண்ணையின்
முகம் பார்க்க
விண்மீண்கள்
கூட
வந்தது
எங்கள்
கூட்டினில்
சேர்ந்தாட
வானவில்
மையம்
கொண்டது
இவ்வழகினைக்
கண்டு
ரசிக்க
துன்பங்கள்
கோடி
வந்த
போதிலும்
இன்பமாக மாறுதே
தந்தை சொன்ன
அறிவுரைகள்
எந்தன்
நெஞ்சில் கல்வெட்டுகள்
அன்னை பேசும்
அன்பு
மொழி
அமிர் தம் போல
இனிக்குதே
சின்ன சண்டை போட்டாலும்
சின்ன சிரிப்பாய் மாறுதே
தூண் போல
அண்ணன்
துணை இருக்கும்
அக்கா
துன்பம்
அருகில்
வந்திடவே
தூர நின்று
யோசிக்கும்
அண்ணன்
கூட
சண்டை
அன்னை தரும்
அடி
அக்கா தரும்
ஆறுதல்
இன்னும்
சண்டை போட தோனுதே
தந்தை என்றும்
அடித்ததில்லை
மகிழ்ச்சியைத்
தவிர
வேறு தந்ததில்லை
சின்ன சின்ன
ஞாபகங்கள்
இன்றும்
நெஞ்சில் இனிக்கிறதே
தாய் தந்தையின் கனவுகள்
எந்தன்
நெஞ்சில்
கோபுரங்கள்
கூவும் குயிலும்
என் கூட்டில்
வாயை மூட
மறுக்குதே
தந்தை நெற்றியில்
விளைந்த
வியர்வைத்
துளி
என் வாழ்வை
உயர்த்த
போராடுதே
கண்மூடிப்
போன என்
கனவுகள்
மண்மூடிப்
போக ஆசையில்லை
எங்கள் கூட்டை
விட்டு வர
மனமும்
இல்லை
No comments:
Post a Comment