சிறகொடிந்த
பறவை இது சிரிக்க முடியல
சிரிக்க
நெனச்சு பறந்த போது பறக்க
முடியல
வாழ்க்கை
இது தானோ
வாழ்வே
இது தானோ
ஆசை மட்டும் நெஞ்சுக்குள்ள ஆயிரம்
இருக்கு
ஆசை மட்டும் இல்லேனா
இந்த வாழ்வே எதுக்கு
காட்டுக்குள்ள
பறந்நு திரிஞ்சது அது ஒரு காலம்
கூட்டுக்குள்ள
இருக்கிறது இப்ப இதோட நேரம்.
துன்பம்
என்றும் எப்போதும் நிரந்தரம் இல்ல
துன்பமில்லா
உயிர்கள் இந்த உலகதத்தில் இல்ல
காலம் நேரம் சரியா அமைஞ்சா
வாழ்வில்
நினைச்சது
எதுவும் நடக்கும்
உன் வாழ்வில்
நெனச்சது
நடக்கும்
உனக்கும்
அந்த காலம் வரும்
சிறகு முளைக்க நேரம் வரும்
கூண்டுக்கதவுகள்
திறக்கும் போது
உனக்குள்
ஒரு வேகம் பிறக்கும்.
காற்று
உனக்கு நண்பனாகும்
உலகம் உனக்கு சொந்தமாகும்
அப்போ எல்லாம்
ஜெயமாகும்
காத்திருப்பது
தவறே
இல்ல
நினைச்சது எல்லாம்
நடக்கும்
வரையில்
No comments:
Post a Comment