ஒரு எழுத்து
பொய்யாகட்டும்
அது அறியாமையின்
பிழை
ஒரு வார்த்தை
பொய்யாகட்டும்
அது அவசியத் தேவை
ஒரு வரி
பொய்யாகட்டும்
அது பிறரின்
ஆவல்
சில வரிகள்
பொய்யாகட்டும்
அது கற்பனையின்
ஊற்று
பல வரிகள் பொய்யாகட்டும்
அது துன்பத்தின்
தொடக்கம்
வரிகள் யாவும்
பொய்யாகட்டும்
அது அழிவின் ஆரம்பம்
No comments:
Post a Comment