Sunday, 23 December 2012

உன் காதலின் சுவடுகள்


உன்  முகம்  பார்த்தேன்
ஓராயிரம்  கவிதைகள்

சொல்லத்  தெரியாத வார்த்தைகள்
சொல்லத்  தெரிந்த  வசனங்கள்
எதுவும்  பயனில்லை
நீ  சென்றுவிட்டாய்

கவிபாடும்  அந்த  இதழ்கள்
என்னைத்  தூங்கவிடாத  அந்த  விழிகள்
எல்லாம் போய்விட்டது

மயிலுக்கே  சவால்  விடும்  உன்  ஆட்டம்
நிலவையே   வெட்கப்படச் செய்யும்   உன் முகம்
எதுவும்  இப்போதில்லை

எத்தனையோ  போட்டி
உன்னுடன்   பேச
எத்தனை  தடங்கள்
உன்னுடன்  சேர
அத்தனையும்  தாண்டி  வந்தேன்
நீ  இல்லை

நீ   விடும்  மூச்சில்
நீ  பேசும்  பேச்சில்
ஆயிரம்  அர்த்தங்களடி

பூவே
நீ   சூட   விண்மீனெல்லாம்  பறித்தேனே
நீ  பார்க்க  வானவில்லையும்  வளைத்தேனே

நானென  இருந்தேன்
நீயென  மாற்றிவிட்டாய்
நாளொரு  பொழுதில்
இதயம்   வருடிவிட்டாய்
கவிதையின்  தோற்றம்  நீயடி
காதலின்   ஆழம்  நானடி
என்று  பிரமித்தேனே
ஆனால்  இன்று  நீயில்லை

மலரே !
எப்பாவி  மகன்  உன்னைப்  பறித்தானோ
எப்பாவி  மகள்  தலையில்  உன்னை  வைத்தானோ
நான்  என்ன  செய்வேன்
நான்  மலருக்கு  மலர் தாவும்  சிறு வண்டுதானே
இருந்தும்  இப்போதும்  எப்போதும்
உன்   காதலின்  சுவடுகள்  என்  நெஞ்சினிலே


No comments:

Post a Comment