காகிதம்
அருகில்
எழுதுகோல்
விரலிடையில்
துடித்தன
கரங்கள்
ஏதோ கவிதை
எழுத
எதைப் பற்றி எழுத
இரவு நேரம் ஆளில்லா
வேளை
அன்புப்
பால் கொடுத்த
அன்னை பற்றியா
ஆளாக்கி
வளர்த்த
தந்தை பற்றியா
என்னை ஆளும்
இறைவனைப்
பற்றியா
நெஞ்சைப்
பறிகொடுத்த
இயற்கையைப் பற்றியா
தோள் கொடுக்கும்
தோழன் பற்றியா
நித்திரையும்
இல்லை
சிந்தையில் கவிதையும்
இல்லை
ஏனோ புரியவில்லை
இதுவரை
எழுதவில்லை
கவிதைக்கும்
எனக்கும்
சொந்தமில்லை
தூசு தட்டி எடுத்தேன் கவிதையை
என் மனதில்
இருந்து
ஏதோ தோன்றியது
கைககள்
தன்
மாயாஜாலத்தை
காட்டியது
கண்கள்
போதும்
போதும்
என்றது
காலைப்
பொழுது
என் தந்தை
எடுத்துப்
படித்தார்
இச்சிறுவனின்
கவிதையை
ஓன்றுமே
புரியவில்லை
குழம்பினார்
தலைப்பை
கண்டு
மெல்ல சிரித்தார்
“ புரியாத
கவிதைகள்
“
பாடலுக்கு
ஏற்ற
தலைப்பு
என்று சொன்னார்
என்னைத்
தட்டிக்
கொடுத்து
No comments:
Post a Comment