Sunday, 23 December 2012

பிறை நிலவு



பிறை நிலவே
நீ  பிழை   நிலவா
இல்லை  ஒளி  நிலவா
தினம் தேய்கின்றாய்
பின்  வளர்கின்றாய்
ஏனோ  இதை  நீ  தொடர்கின்றாய்

காரிருள்   சூழ  வருகை  தந்தாய்
தினம் இன்பக் காட்சி   நீயே   காணத்தந்தாய்
பிறையே !
பெண்ணென  உன்னை   புகழச்  செய்தாய்
பெண்ணாக   நீ  இருந்தால்
நாணம் விட்டு
நடு   இரவில்  யாரைத்   தேடி  அலைகின்றாய்
மாதம்   ஒருமுறை  எங்கே  தொலைகின்றாய்

காலங்காலமாய்  இருக்கின்றாய்
தலை  நரைக்காமல்  இன்றும்  சிரிக்கின்றாய்
வயது   முதிர்ந்த  கிழவியே
நீ  தான்  எங்கள் குமரியே


1 comment: