Sunday, 23 December 2012

காதல் பொல்லாதது



காதல்
கண்களால்   பேசத்  துவங்கி
கண்ணீரை  மட்டும்  பரிசாக்கி
இதயம் தருவேன் என்று
ஏமாற்றும் விளையாட்டு

காதலிக்கும் போது
உன்னை  பிரிய  மனமே  இல்லை
என்று  பேசும்  உதடுகள்
திருமணத்திற்கு  பின்
உன்னிடம்   பேச  மனமே  இல்லை
என்று  சொல்ல  செய்யும்  வேலையாள்

காதலிக்கும் போது
பெருந்தவறும்  காதலால்  கரைந்து விடும்
திருமணத்திற்கு பின்
சிறு தவறும் வார்த்தையால்
 காதலை பிரித்து விடும்

மொத்தத்தில்
நீ  விட்டு  சென்ற  காதலை
என்  குழந்தைக்கு  பெயராய்  வைப்பேன்
என்று  சொல்லும்  காதல்
பொல்லாதது

No comments:

Post a Comment