சொல்லேதும் இல்ல
எங்க
ஆத்தா பத்தி சொல்ல
அம்மா போல வருமா
அவ
ஆண்டவன் தந்த வரமா
சுத்தி எங்கும்
பாசம் பாசம்
தீராதிந்த தாய் நேசம்
எட்டுபட்டி நாட்டாமைக்கும்
இருக்கவேணும் தாய் பாசம்
( சொல்லேதும் )
ஆத்தா ஊட்டும்
சோறு
அதில் அமிர்தம் தோற்கும் பாரு
அது பாசம் நேசம்
எல்லாம் சேர்ந்த
கூட்டாஞ்சோறு
பஞ்சு மெத்தை எதற்கு
அதில் பாசம் இல்ல ஒதுக்கு
தாய்மடியில் தானே
சொர்க்கம் இருக்கு
( சொல்லேதும் )
அம்மா அம்மா அம்மா
நீ ஆயுள் தந்த தெய்வம்
உன் புன்னகையை
பார்த்த போதும்
என் சோகம் எல்லாம் மாறும்
புது உற்சாகம்
நெஞ்சுக்குள்ளே பிறந்திடுமே
கல்ல மண்ண தூக்கிட்டு
அக்கம் பக்கம் பாத்துகிட்டு
தாலாட்டு பாடுறது
எதற்காக
அவ பாடுபட்டு உழைப்பது உனக்காக
இல்ல எனக்காக
( சொல்லேதும் )
No comments:
Post a Comment