என் வாழ்க்கையே
சரியில்ல
என்
வானத்தில் நிலவில்ல
என் கண்ண கட்டி
கைய கட்டி
காட்டுல விட்டா புள்ள
எந்த சாமிக்கு
என் மேல் கோபம்
நான் என்ன செஞ்சேன் பாவம்
என் சொந்தம் பந்தம்
எல்லாம் போச்சே
யாரு தந்த சாபம்
( என் வாழ்க்கையே )
உசுர மட்டும் விட்டு
புட்டு
எல்லாம் வித்து போயாச்சு
சொந்தமுன்னு சொன்னவங்க
சொல்லிக்காம போயாச்சு
காதலுன்னு சொன்ன
புள்ள
கழட்டி விட்டு நாளாச்சு
காசு பணம் வந்த பின்னே
காக்கா கூட கலராச்சு
யாரோ நான் யாரோ
நான் இத்துப்போன நாரோ
யாரோ நான் யாரோ
நான் பஞ்சர் ஆன காரோ
( என் வாழ்க்கையே )
நல்லவனா வாழ்ந்தா
போதும்
நாமம் போடுற உலகம்
நம்பிக்கை யார்
மேல வைக்க
எல்லாம் இங்க கலகம்
மனசு தொறந்து பார்க்க
சாவி எங்க தேட
அத தொறந்து யாரும் பார்த்தா
எவன் ஒன்னா இருப்பான் கூட
கெட்டதும் கெட்டதும்
பிரண்ட்ஸ் ஆச்சு
இதில் கெட்டவன் வாழ்க்க வீணாச்சு
சுத்துற பூமிக்கு
வயசாச்சு
நான் சுத்தமா என்ன மறந்தாச்சு
( என் வாழ்க்கையே )
No comments:
Post a Comment