காரணமின்றியே கண்ணீர்
வழிகிறதே
உன் பூமுகம் பார்த்தால் உடனே மறைகிறதே
அன்பென்ற சொல்லை
கேட்டாலே
தாயே உன் முகமே தெரிகிறதே
உலகத்தின் அர்த்தம்
பார்த்தாலே
தாயே உன் நினைவே வருகிறதே
எந்நாளுமே எப்போதுமே
உன் போல யார் தான் இங்குண்டு
( காரணமின்றியே )
நீ காட்டும் அன்பிற்கு
ஈடேதும் இல்லையம்மா
நீ சொல்லும் ஒற்றை வார்த்தை உலகை மாற்றுமம்மா
நான் அழுதால் அழுவதற்கும்
நான் சிரித்தால் சிரிப்பதற்கும்
உன்னை விட உலகினில்
சொந்தம் ஏதும்
இங்கே இல்லையம்மா
நீ நல்லவனா கெட்டவனா
தாய் தான் பார்ப்பதில்லை
நீ எங்கிருந்தாலும்
எதிரில் வந்தாலும்
பாசம் குறைவதில்லை , தாயின் பாசம் குறைவதில்லை
( காரணமின்றியே )
விழியில் இமைபோலே
என்னை காத்தாய் மடிமேலே
கருவில் நான் உதைத்தால்
கூட
சிரிப்பாய் மண்மேலே
சந்தோசம் என்பது
தாய் தந்த வேதமே
சங்கீதம் என்பது நீ பாடும் தாலாட்டே
என்ன செய்தாலும்
தாய் பாசம் தீராதம்மா
என்ன தந்தாலும் தாய்மைக்கு ஈடாகுமா
( காரணமின்றியே )
gothai song i love that but ur writting the karanam intri kaneer varukerathy song la your only menson in mother why?
ReplyDelete