அடி இங்கே இங்கே
தீபாவளி
அடி நெஞ்சில் நெஞ்சில் ஏனோ வலி
தொடரட்டும் என்றே
இதை நீ நினைத்தாயோ
பேசாமல் சென்றே நீயும் வலி கொடுப்பாயோ
மத்தாப்பும் வெடிக்குதே , பட்டாசும் வெடிக்குதே
என் நெஞ்சம் ஏனோ இங்கு துண்டாய் கிடக்குதே
( அடி இங்கே )
உயிரில்
விதை விதைத்தாய்
காதல்
கரு கலைத்தாய்
என்னை ஏன்டி நீயும்
வதைத்தாய்
மண்ணோடு என்னை சேர்த்து புதைத்தாய்
காயம் ஆறும் முன்னே
மீண்டும் காயம் வந்தால்
அது குணமாகுமா
, இல்லை வலி தாங்குமா
( அடி இங்கே )
வேதாளம் ஒன்று
வேடிக்கையென்று
என் வாழ்வில் இன்று புகுந்ததே
என் வாழ்வை மாற்றி
ஏதேதோ கூட்டி
என் கனவை கனவாக்கி கலைத்ததே
எதிர்காலம் நீயென்று
நினைக்கயிலே
ஆசை கொஞ்சம்
முளைக்கயிளே
நீ என்னை விட்டு
போகிறாய்
என் நெஞ்சை கொன்று எறிகிறாய்
(……………)
விழியேதும் இல்லையென்றால்
இமைக்கேது வேலையடி
நீ
இல்லா உலகில் நான் வசிப்பது கொடுமையடி
( அடி இங்கே )
No comments:
Post a Comment