நட்பென்பது எப்போ
பூப்பது
இரவிலா பகலிலா
நட்பென்பது எங்கே
பூப்பது
மனதிலா இதயத்திலா
ஒரு பூ
நட்பென்ற சின்ன
பூ
வாசம் தந்தது
அந்த வாசம்
எங்களின் நேசம்
சொன்னது
கல்லூரி நுழையும்
போது
தென்றலாய் நட்பெங்களை
தாலாட்டும்
இரு வரி கவிதை
போல
சீராட்டும்
சின்ன சின்னதாய்
நட்பை சேமித்தோம்
சேமித்த நட்பையே
நாங்கள் சுவாசித்தோம்
எங்கள் கல்லூரி
ஒரு
பூந்தோட்டமே
அந்த பூந்தோட்டத்தில்
நாங்கள் தேன்கூட்டமே
சின்ன சின்ன கேலி
கிண்டல் எல்லாம்
இங்கு சந்தோசம்
தான்
இங்கு யார் மனதும்
புண்படுவதில்லை
எல்லாமே வேடிக்கை
தான்
நாங்கள் சண்டை
போட மாட்டோம்
சண்டை போட்டாலும்
நட்பை மட்டும்
விடவே மாட்டோம்
காலை , அது மாலை
செல்லும் வேளை
உயிரோடு கலந்திடும்
– நட்பு
என்றும் எங்கள்
மத்தியிலே
எங்கே நாங்கள்
சென்றாலும்
எத்தனை ஆண்டுகள்
ஆனாலும்
எங்கள் கண்கள்
பார்க்கும் போது
இதழில் புன்னகை
பூக்குமே
இது எங்கள் நட்பின்
நேசமே
சாலையோர பட்டாம்பூச்சி நாங்கள்
சூரியனுக்கே துண்டில் போடும் விண்மீனும் நாங்களே
உயிர் ஒன்றும்
பெரிதில்லை
நண்பனுக்கு உதவையிலே
சோகம் நெஞ்சை தீண்டினால்
– அன்னையாய்
நட்பு எங்கள் பக்கத்திலே
நட்பிலல்லா இடம்
இங்கு , எங்கும் இல்லை
அப்படியும் இடம்
இருந்தால்
அது ஒரு இடமே இல்லை
.
No comments:
Post a Comment