வருடலில் அலையும்
காற்றில் – கண்ணா !
உன் குரல் கேட்கின்றேனே
சாரல் மழையில்
விழும் துளியில் – கண்ணா !
உன் முகம் பார்கின்றேனே
தேன் பிறக்கும்
மலரில்
உன் வாநம் தேடுகின்றேனே
உன்னில் என்னை
காணும் – கண்ணா !
கோதை நான் பெண்ணே
!
சித்திரமாய் நீ
வந்திருப்பாய்
நான் பார்க்கும்
போது நீ கண்ணிமைப்பாய்
மெல்லினமாய் நீ
சிரிப்பாய்
நான் யாரிடமேனும்
சொனனால் – என்னை
பேதையென சொல்லச் செய்வாய்
குளியலரையில் தண்ணீராய்
நான் வரும் முன்பே
நீ வந்திருப்பாய்
குழல் ஊதி நீ அழைப்பாய்
இசையாலே என்னை
இழுப்பாய்
என் கண்ணத்தில்
விழும் குழியை
கனவிலே வந்து நீ
அணைப்பாய்
கண்ணா !
உன் விளையாட்டில்
கோதை நான்
பேதையாகி போனேனே
!
No comments:
Post a Comment