என்னை எதிர்ப்பவன்
எவனும் இங்கில்ல
இருந்தால் அவனும்
இருப்பதில்ல
உறங்கிய மிருகத்தை
தட்டி எழுப்பிவிட்டு
தப்பிப் பிழைப்பவன்
எவனுமில்ல
( எவன்டா…)
இந்த காட்டுக்கு
நானே சிங்கமடா
எதிர்ப்பவன் சங்கு
நொறுங்குமடா
நினைத்ததை முடிப்பதில்
வல்லவன்டா
( இவன்டா ..)
( என்னை )
இவனுக்கு இவனின்றி
ஈடு இல்லை
இவனது பாதையில்
தடைகள் இல்லை
ஆயுதம் எதுவும்
தேவையில்லை
இவன் எமனுக்கு
தத்துப்பிள்ளை
( எவன்டா…)
வெற்றிகள் இவனுக்கு
அடிமை
இவன் வேதங்கள்
எல்லாம் புதுமை
விண்ணிலும் இவனது
பெருமை
என்றும் அழியாத
தனித்தன்மை
( எவன்டா…)
( என்னை )
கட்டுக் கடங்காத
புயலும்
இவனுக்கு வழிவிட்டு
நடக்கும்
இவனை மிஞ்சி எது
தான்
இங்கே இனி என்ன
நடக்கும்
( இவன்டா…)
கண்கள் அனலாய்
மாறும்
கைகளில் நரம்புகள்
வெடிக்கும்
இங்கே இனி என்ன
நடக்கும்
சரவெடி தான் அங்கே
வெடிக்கும்
( எவன்டா…)
( என்னை )
No comments:
Post a Comment