Monday, 11 March 2013

என்னை எதிர்ப்பவன்


என்னை எதிர்ப்பவன் எவனும் இங்கில்ல
இருந்தால் அவனும் இருப்பதில்ல
உறங்கிய மிருகத்தை தட்டி எழுப்பிவிட்டு
தப்பிப் பிழைப்பவன் எவனுமில்ல
                           ( எவன்டா…)
இந்த காட்டுக்கு நானே சிங்கமடா
எதிர்ப்பவன் சங்கு நொறுங்குமடா
நினைத்ததை முடிப்பதில் வல்லவன்டா
                           ( இவன்டா ..)
                           ( என்னை )
இவனுக்கு இவனின்றி ஈடு இல்லை
இவனது பாதையில் தடைகள் இல்லை
ஆயுதம் எதுவும் தேவையில்லை
இவன் எமனுக்கு தத்துப்பிள்ளை
                           ( எவன்டா…)
வெற்றிகள் இவனுக்கு அடிமை
இவன் வேதங்கள் எல்லாம் புதுமை
விண்ணிலும் இவனது பெருமை
என்றும் அழியாத தனித்தன்மை
                           ( எவன்டா…)
                           ( என்னை )
கட்டுக் கடங்காத புயலும்
இவனுக்கு வழிவிட்டு நடக்கும்
இவனை மிஞ்சி எது தான்
இங்கே இனி என்ன நடக்கும்
                           ( இவன்டா…)
கண்கள் அனலாய் மாறும்
கைகளில் நரம்புகள் வெடிக்கும்
இங்கே இனி என்ன நடக்கும்
சரவெடி தான் அங்கே வெடிக்கும்
                           ( எவன்டா…)
                           ( என்னை )

விட்டு விட்டோம்


எங்கள் தோட்டத்திலே !
மரம் நட்டோம்
செடி நட்டோம்
அவரைக்காய் கொடி நட்டோம்
எம்பெருமானே !
எங்கள் உள்ளத்திலே
நல்லெண்ணம் மட்டும்
நட்டுவிட மறந்துவிட்டோம் பெருமானே !

ஊரெல்லாம் கால்களை ஓட விட்டோம்
ஓடத்திலே கப்பல் விட்டோம்
சோகத்திலே கண்ணீர் விட்டோம்
அரைத்துண்டு பீடியிலே புகை விட்டோம்
எம்பெருமானே !
சுயநலத்தால் , உண்மையையும் சேர்த்து
விட்டு விட்டோம் பெருமானே !

வானத்திலே பறந்து விட்டோம்
நிலவுக்கே போய் விட்டோம்
உலகெங்கும் சுற்றி விட்டோம்
சாதனைகள் பல புரிந்து விட்டோம்
எம்பெருமானே !
ஆசைக்கு மட்டும்
அணை கட்ட மறந்து  விட்டோம் பெருமானே !

கோடி பணம் சேர்த்து விட்டோம்
கட்சி , மாநாடு கூட்டி விட்டோம்
கல்வித் தரம் உயர்த்தி விட்டோம்
சலுகைகள் பல கெடுத்து விட்டோம்
எம்பெருமானே !
வறுமையை மட்டும்
இன்னும் இருக்க விட்டோம் பெருமானே !

காலையிலே தூக்கம் விட்டோம்
வேலைக்கு ஓட்டம் விட்டோம்
நேரத்திற்கு உணவு மறந்து விட்டோம்
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து விட்டோம்
எம்பெருமானே !
உள்ளத்தில் நிம்மதியையும் விட்டு விட்டோம் பெருமானே !

இப்படியே
விட்டதெல்லாம் சேர்த்து விட
மறந்து விட்டோம் பெருமானே !              

கோதை நான் பெண்ணே


வருடலில் அலையும் காற்றில் – கண்ணா !
உன் குரல் கேட்கின்றேனே
சாரல் மழையில் விழும் துளியில் – கண்ணா !
உன் முகம் பார்கின்றேனே
தேன் பிறக்கும் மலரில்
உன் வாநம் தேடுகின்றேனே
உன்னில் என்னை காணும் – கண்ணா !
கோதை நான் பெண்ணே !

சித்திரமாய் நீ வந்திருப்பாய்
நான் பார்க்கும் போது நீ கண்ணிமைப்பாய்
மெல்லினமாய் நீ சிரிப்பாய்
நான் யாரிடமேனும் சொனனால் – என்னை
பேதையென  சொல்லச் செய்வாய்

குளியலரையில் தண்ணீராய்
நான் வரும் முன்பே நீ வந்திருப்பாய்
குழல் ஊதி நீ அழைப்பாய்
இசையாலே என்னை இழுப்பாய்
என் கண்ணத்தில் விழும் குழியை
கனவிலே வந்து நீ அணைப்பாய்
கண்ணா !
உன் விளையாட்டில்
கோதை நான்
பேதையாகி போனேனே !

நட்பு


நட்பென்பது எப்போ பூப்பது
இரவிலா பகலிலா
நட்பென்பது எங்கே பூப்பது
மனதிலா இதயத்திலா
ஒரு பூ
நட்பென்ற சின்ன பூ
வாசம் தந்தது
அந்த வாசம்
எங்களின் நேசம் சொன்னது
கல்லூரி நுழையும் போது
தென்றலாய் நட்பெங்களை தாலாட்டும்
இரு வரி கவிதை போல
சீராட்டும்

சின்ன சின்னதாய்
நட்பை சேமித்தோம்
சேமித்த நட்பையே
நாங்கள் சுவாசித்தோம்

எங்கள் கல்லூரி ஒரு
பூந்தோட்டமே
அந்த பூந்தோட்டத்தில் நாங்கள் தேன்கூட்டமே

சின்ன சின்ன கேலி கிண்டல் எல்லாம்
இங்கு சந்தோசம் தான்
இங்கு யார் மனதும் புண்படுவதில்லை
எல்லாமே வேடிக்கை தான்

நாங்கள் சண்டை போட மாட்டோம்
சண்டை போட்டாலும்
நட்பை மட்டும் விடவே மாட்டோம்

காலை , அது மாலை செல்லும் வேளை
உயிரோடு கலந்திடும் – நட்பு
என்றும் எங்கள் மத்தியிலே

எங்கே நாங்கள் சென்றாலும்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
எங்கள் கண்கள் பார்க்கும் போது
இதழில் புன்னகை பூக்குமே
இது எங்கள் நட்பின் நேசமே

சாலையோர பட்டாம்பூச்சி  நாங்கள்
சூரியனுக்கே  துண்டில் போடும் விண்மீனும் நாங்களே

உயிர் ஒன்றும் பெரிதில்லை
நண்பனுக்கு உதவையிலே
சோகம் நெஞ்சை தீண்டினால் – அன்னையாய்
நட்பு எங்கள் பக்கத்திலே

நட்பிலல்லா இடம் இங்கு , எங்கும் இல்லை
அப்படியும் இடம் இருந்தால்
அது ஒரு இடமே இல்லை .

லஞ்சம்


கோடி
கோடியான பின்னும்
பணப்பித்து தீரவில்லையடா
மானிடா உனக்கு
பணப்பித்து தீரவில்லையடா

லஞ்சம் வாங்க
உன் நெஞ்சத்தை
கழற்றி வைத்தாயோ

வஞ்சம் கொண்ட
கயவனைப் போல்
நீ லஞ்சம் வாங்கலாமா

நீ கண்மூடி
போன பின்னே நீயும்
மண்தானடா
நீயும் மண்தானடா

பணம் கொண்டு
பிணம் வாங்கலாம்
அப்பிணத்திற்கு
உயிர் தர முடியுமா

கல் நெஞ்சனுக்கு
கற்றவரென்ன
கயவரென்ன
லஞ்சம் வாங்க

முகமூடி போடாதடி காதலுக்கு


முகமூடி போடாதடி காதலுக்கு
விலையேதும் கேட்காதடி பார்ப்பதற்கு – உன்னை
நினைத்தாலே கொட்டுமடி தேன் எனக்கு – நெஞ்சில்
ஆயிரம் கனவுகள் உன்னோடு வாழ்வதற்கு
நான் போகும் பக்கம் எல்லாம் நீ தானே
நீ இல்லா வாழ்க்கை வீண் தானே
சாரலாய் நீ வந்து , காதலைத் தான் தந்து
கண் ஜாடை காட்டி நீயும் போகாதே
                           ( முகமூடி )
ஊரெல்லாம் சுற்றி வந்தேன்
தூரல் தான் இல்லை
நீ வந்த போது நனைந்தேன் பெண்ணே
உனைபோல ஒரு பெண்ணை நான் காணவில்லை
அதனாலே என் நெஞ்சம் உனை நீங்கவில்லை
காலங்கள் மாறிப் போனாலும் கூட
நான் கொண்ட காதல் மாறாதடி
என்னை தேடி வந்து பார்க்கிறாய் தேவதை போல
நீ பேச பேச மாறினேன் வானவில் போல
                           ( முகமூடி )
நண்பன் என்று சொல்லி
     ஆளை கொல்லும் கள்ளி
காதலுக்கு அணை கட்ட முடியாதே
ஆதாம் ஏவால் காலம்
     அது விட்டு போக கூடும்
நீ காதல் சொன்னால்
     காலம் மாறி கிடப்போமே
                          ( முகமூடி )

காரணமின்றியே கண்ணீர் வழிகிறதே


காரணமின்றியே கண்ணீர் வழிகிறதே
     உன் பூமுகம் பார்த்தால் உடனே மறைகிறதே
அன்பென்ற சொல்லை கேட்டாலே
     தாயே உன் முகமே தெரிகிறதே
உலகத்தின் அர்த்தம் பார்த்தாலே
     தாயே உன் நினைவே வருகிறதே
எந்நாளுமே எப்போதுமே
     உன் போல யார் தான் இங்குண்டு
                           ( காரணமின்றியே )

நீ காட்டும் அன்பிற்கு ஈடேதும் இல்லையம்மா
     நீ சொல்லும் ஒற்றை வார்த்தை உலகை மாற்றுமம்மா
நான் அழுதால் அழுவதற்கும்
     நான் சிரித்தால் சிரிப்பதற்கும்
உன்னை விட உலகினில் சொந்தம் ஏதும்
     இங்கே இல்லையம்மா
நீ நல்லவனா கெட்டவனா
     தாய் தான் பார்ப்பதில்லை
நீ எங்கிருந்தாலும் எதிரில் வந்தாலும்
     பாசம் குறைவதில்லை , தாயின் பாசம் குறைவதில்லை
( காரணமின்றியே )
விழியில் இமைபோலே
     என்னை காத்தாய் மடிமேலே
கருவில் நான் உதைத்தால் கூட
     சிரிப்பாய் மண்மேலே
சந்தோசம் என்பது தாய் தந்த வேதமே
     சங்கீதம் என்பது நீ பாடும் தாலாட்டே
என்ன செய்தாலும் தாய் பாசம் தீராதம்மா
     என்ன தந்தாலும் தாய்மைக்கு ஈடாகுமா
                           ( காரணமின்றியே )

சொல்லேதும் இல்ல


சொல்லேதும் இல்ல
எங்க ஆத்தா பத்தி சொல்ல
அம்மா போல வருமா
அவ ஆண்டவன் தந்த வரமா
சுத்தி எங்கும் பாசம் பாசம்
     தீராதிந்த தாய் நேசம்
எட்டுபட்டி நாட்டாமைக்கும்
     இருக்கவேணும் தாய் பாசம்
                           ( சொல்லேதும் )
ஆத்தா ஊட்டும் சோறு
     அதில் அமிர்தம் தோற்கும் பாரு
அது பாசம் நேசம் எல்லாம் சேர்ந்த
     கூட்டாஞ்சோறு
பஞ்சு மெத்தை எதற்கு
     அதில் பாசம் இல்ல ஒதுக்கு
தாய்மடியில் தானே சொர்க்கம் இருக்கு
                           ( சொல்லேதும் )
அம்மா அம்மா அம்மா
     நீ ஆயுள் தந்த தெய்வம்
உன் புன்னகையை பார்த்த போதும்
     என் சோகம் எல்லாம் மாறும்
புது உற்சாகம் நெஞ்சுக்குள்ளே பிறந்திடுமே

கல்ல மண்ண தூக்கிட்டு
     அக்கம் பக்கம் பாத்துகிட்டு
தாலாட்டு பாடுறது எதற்காக
     அவ பாடுபட்டு உழைப்பது உனக்காக
           இல்ல எனக்காக
                           ( சொல்லேதும் )

ஏ பெண்ணே நில்லு


ஏ பெண்ணே நில்லு உன் பெயர் சொல்லு போகாதே
உன் கண்ணில் காந்தம் வைத்து என்னை ஈர்க்காதே
இத்தனை வருடம் இத்தனை நாட்கள் இத்தனை நிமிடம்
உனக்காகத் தான் காத்துக் கிடந்தேனா
என் இருபது வயதில் இதயம் தொலைத்தேன்
உன்னை கண்டு நானும் தொலைந்தேன் சரிதானா

( இந்த பசங்களே இப்படிதான் முதன் முதல்ல பொண்ண
பாத்தா போதும் மெலோடியா பாடி கொல்ராங்க
டியுன( tune ) மாத்துங்கடா சாமி )

நீ ஒரு பார்வை பார்த்தால் போதும்
     என் காதல் பஞ்சம் தீரும்
நீயும் நானும் சேர்ந்தால்
     புது காதல் கலையே தோன்றும்

பெண்ணே !
உன்னை பார்த்த பின்னே என் விழிரெண்டும்
     எப்போதும் உன் பின்னே அலையுதடி
கண்ணால் உன் பெயர் சொன்னால்
     உன் முத்துக்கள் உதிராதடி

உங்க அப்பா என்ன பில்கேட்ஸா
     உங்க அம்மா கிளியோபாட்ராவா
ஏன்டி நீயும் ரொம்ப பிளிமு காட்டுர
     என்ன நீயும் ரொம்ப அலட்சிய படுத்துற
அடியே அடியே நீ செல்லம்
     அடிக்கடி துடிக்குது என் உள்ளம்

பேப்பர் போல என்ன கிழிச்சு போடாதே
     பெப்பர் போல என்ன சந்துல வீசாதே
                                ( அடியே )
எப்எம் ரேடியோ போல என்ன கத்த விட்டயேடி
     தெரு நாய் போல உன் பின்னே சுத்தவிட்டயடி
சரியா சரியா
நீ செய்வது முறையா முறையா
உன்ன விட்டா ஆளு இருக்கு
அத்த பொண்ணு காத்திருக்கு
( இதுக்கு மேல பாட முடியாதுறா சாமி Escape ) 

கைகள் தொடும் முன்னே தொடுவானம்


கைகள் தொடும் முன்னே தொடுவானம்
     தொலைவினில் போவது ஏன் தானோ
இலையுதிர் காலம் இதுதானோ
     இருந்தவன் வீழ்ந்ததும் முறைதானா
கண்ணீர் துளிகள் புல்லுக்கும் வருதே
     காலையில் பனித் துளியாக
நீ இருந்ததும் கொஞ்சம் நிறைந்ததே நெஞ்சம்
     பூமிக்கு நீ மகனாக
இருந்தால் இருக்கணும் உனை போல
வலியிலும் சிரிக்கனும் தாய் போல
உன் வாழ்க்கை உலகுக்கு நீர் போல
      நீர் போல
                          ( கைகள் )
நீ விதையென விழுந்ததும்
     செடியென முளைப்பதும் உந்தன் விதி வினையா
           இல்லை இறைவன் சதி வலையா
                           ( கைகள் )

அடி இங்கே இங்கே தீபாவளி


அடி இங்கே இங்கே தீபாவளி
     அடி நெஞ்சில் நெஞ்சில் ஏனோ வலி
தொடரட்டும் என்றே இதை நீ நினைத்தாயோ
     பேசாமல் சென்றே நீயும் வலி கொடுப்பாயோ
மத்தாப்பும் வெடிக்குதே  , பட்டாசும் வெடிக்குதே
     என் நெஞ்சம் ஏனோ இங்கு துண்டாய் கிடக்குதே
                           ( அடி இங்கே )
உயிரில் விதை விதைத்தாய்
காதல் கரு கலைத்தாய்
என்னை ஏன்டி நீயும் வதைத்தாய்
     மண்ணோடு என்னை சேர்த்து புதைத்தாய்
காயம் ஆறும் முன்னே
     மீண்டும் காயம் வந்தால்
அது குணமாகுமா , இல்லை வலி தாங்குமா
( அடி இங்கே )
வேதாளம் ஒன்று வேடிக்கையென்று
     என் வாழ்வில் இன்று புகுந்ததே
என் வாழ்வை மாற்றி ஏதேதோ கூட்டி
     என் கனவை கனவாக்கி கலைத்ததே

எதிர்காலம் நீயென்று நினைக்கயிலே
     ஆசை கொஞ்சம் முளைக்கயிளே
நீ என்னை விட்டு போகிறாய்
     என் நெஞ்சை கொன்று எறிகிறாய்
(……………)
விழியேதும் இல்லையென்றால் இமைக்கேது வேலையடி
நீ இல்லா உலகில் நான் வசிப்பது கொடுமையடி
                           ( அடி இங்கே )

என் வாழ்க்கையே சரியில்ல


என் வாழ்க்கையே சரியில்ல
என் வானத்தில் நிலவில்ல
என் கண்ண கட்டி கைய கட்டி
     காட்டுல விட்டா புள்ள
எந்த சாமிக்கு என் மேல் கோபம்
     நான் என்ன செஞ்சேன் பாவம்
என் சொந்தம் பந்தம் எல்லாம் போச்சே
     யாரு தந்த சாபம்
                     ( என் வாழ்க்கையே )
உசுர மட்டும் விட்டு புட்டு
     எல்லாம் வித்து போயாச்சு
சொந்தமுன்னு சொன்னவங்க
     சொல்லிக்காம போயாச்சு
காதலுன்னு சொன்ன புள்ள
     கழட்டி விட்டு நாளாச்சு
காசு பணம் வந்த பின்னே
     காக்கா கூட கலராச்சு
யாரோ நான் யாரோ
     நான் இத்துப்போன நாரோ
யாரோ நான் யாரோ
     நான் பஞ்சர் ஆன காரோ
                     ( என் வாழ்க்கையே )
நல்லவனா வாழ்ந்தா போதும்
     நாமம் போடுற உலகம்
நம்பிக்கை யார் மேல வைக்க
     எல்லாம் இங்க கலகம்
மனசு தொறந்து பார்க்க
     சாவி எங்க தேட
அத தொறந்து யாரும் பார்த்தா
     எவன் ஒன்னா இருப்பான் கூட
கெட்டதும் கெட்டதும் பிரண்ட்ஸ் ஆச்சு
     இதில் கெட்டவன் வாழ்க்க வீணாச்சு
சுத்துற பூமிக்கு வயசாச்சு
     நான் சுத்தமா என்ன மறந்தாச்சு
                     ( என் வாழ்க்கையே )

நெஞ்சம் முழுக்க


நெஞ்சம் முழுக்க நீயடி
வலிகள் தருவதும் ஏனடி
கண்கள் சொல்வது பொய்யடி
நெஞ்சம் சொல்வதை கேளடி
தாயின் அன்பிற்கு ஏங்கும் குழந்தை போல
     உந்தன் அன்பிற்கு ஏங்கும் குழந்தையாக
அழுகிறேன் , தவிக்கிறேன்
     தாலாட்டு பாட மாட்டோயோ நீ
நான் இங்கே , நீ எங்கே
     என் வாழ்விற்கு பொருளெங்கே
                           ( நெஞ்சம் )
ஒரு விழியின்றி மறுவிழியிங்கே துடிக்கின்றதே
     மைவிழி காட்டும் பெண்ணே உன்னை நினைக்கின்றதே
           மனம் நினைக்கின்றதே
ஆயிரம் பூக்கள் ஒன்றாய் சேர்ந்த அழகியடி
உன் வாசம் வீசும் பக்கம் வந்தால் வசந்தமடி
     என்னில் வசந்தமடி
                           ( நெஞ்சம் )         
கை எட்டும் தூரத்தில்
     நீ எந்தன் ஓரத்தில்
           இருந்தும் ஏன் ஏய்க்கிறாய்
ஒரு மாலை நேரத்தில்
     நான் சாயும் சாமத்தில்
           கனவில் நீ மொய்க்கிறாய்
நெஞ்சம் என்னை விட்டு ஓடி போக
     உந்தன் நெஞ்சம் கொடு நானும் வாழ
என் இதயத்தில் நீயடி …..
உன் இதயத்தில் யாரடி …..
                           ( நெஞ்சம் )

நெஞ்சுக்குள்ள ஆசையில்ல


நெஞ்சுக்குள்ள ஆசையில்ல
உள்ளம் அது தான் ஊமையில்ல
கட்டெறும்புக்கு காதல் புள்ள
சொல்லித் தரத்தான் தெரியவில்ல
அழகா பொறந்து , என் கண்ணில் தென்பட்டு
உசுர குடிச்ச , அடி நீ தான் தேன்சிட்டு
                           ( நெஞ்சுக்குள்ள )
தானா போகுற மனச இழுத்து
தண்டவாளத்தில் நீ தான் செலுத்தி
இரயில பாய்ச்சுற
மனச நொறுக்குற
நொறுங்கி போன மனச பொறுக்குற
ஏன்டி நடிக்கிற
அதுக்கா படிக்கிற
என்ன கொஞ்சம் நீ தான் தொறத்துற
                           ( நெஞ்சுக்குள்ள )
ஒன்னுன்னா ஒன்னுன்னு சொல்லிப்புடு
ஓகேனு சொன்னாக்கா அள்ளிக்கொடு
உன் தோலில் சாய கொஞ்சம் நேரம் கொடு
தப்பேதும் செஞ்சாகா ஆள விடு
நீ வந்தாலே வந்தாலே பூவாசம் ஆள தூக்கும்
என்னை விட்டு நீ போனாலே , என் நெஞ்சு என்ன ஆகும்
அடி கண்ணும் கண்ணும் பேச
அது கத்தி ரெண்டும் வீச
உன் கையில் நெஞ்ச கொண்டு போற , என்னடி ஆச
                                ( நெஞ்சுக்குள்ள )