Sunday, 27 September 2015

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு போதிமரம்
உணர்ந்தவன் வெற்றி பெறுகிறான்
உணராதவன் வெட்டி விடுகிறான்

Saturday, 14 March 2015

நீ பார்க்கும் திசையெல்லாம்

நீ பார்க்கும் திசையெல்லாம்,  நான் பார்க்கிறேன்
நீ போன வழி தேடி, நான் போகிறேன் அடடா காதல் வந்தால்,
என்னாகும் கண்டேனே என் பார்வைக்குள்ளே, நீ விழுந்தாயடி
என் இதயத்தில் வேர் விட்டு முளைத்தாயடி

( நீ பார்க்கும் ) நதி எங்கே பிறந்தாலும், கடல் தேடி போகும்
உனை காணும் நொடி தேடி, என் ஜீவன் வாழும் கண் மூடி கிடந்தாலும்,
உன் பிம்பம் பார்ப்பேனே ( அடடா காதல் )
( நீ பார்க்கும் ) என் சேய்க்கு தாயாக, நீ வேண்டுமே
உன் பாதி நானாகும், வரம் வேண்டுமே

( அடடா காதல் )

( நீ பார்க்கும் )

Wednesday, 31 July 2013

ஹைக்கூ கவிதை

"நாங்கள் கிழிந்து போன ஓசோன் படலம்
அதை , எட்ட பார்த்து வருத்தப்பட
ஆயிரம் பேர் உண்டு
ஆனால் ஒட்டத் தான் யாருமில்லை"

Monday, 11 March 2013

என்னை எதிர்ப்பவன்


என்னை எதிர்ப்பவன் எவனும் இங்கில்ல
இருந்தால் அவனும் இருப்பதில்ல
உறங்கிய மிருகத்தை தட்டி எழுப்பிவிட்டு
தப்பிப் பிழைப்பவன் எவனுமில்ல
                           ( எவன்டா…)
இந்த காட்டுக்கு நானே சிங்கமடா
எதிர்ப்பவன் சங்கு நொறுங்குமடா
நினைத்ததை முடிப்பதில் வல்லவன்டா
                           ( இவன்டா ..)
                           ( என்னை )
இவனுக்கு இவனின்றி ஈடு இல்லை
இவனது பாதையில் தடைகள் இல்லை
ஆயுதம் எதுவும் தேவையில்லை
இவன் எமனுக்கு தத்துப்பிள்ளை
                           ( எவன்டா…)
வெற்றிகள் இவனுக்கு அடிமை
இவன் வேதங்கள் எல்லாம் புதுமை
விண்ணிலும் இவனது பெருமை
என்றும் அழியாத தனித்தன்மை
                           ( எவன்டா…)
                           ( என்னை )
கட்டுக் கடங்காத புயலும்
இவனுக்கு வழிவிட்டு நடக்கும்
இவனை மிஞ்சி எது தான்
இங்கே இனி என்ன நடக்கும்
                           ( இவன்டா…)
கண்கள் அனலாய் மாறும்
கைகளில் நரம்புகள் வெடிக்கும்
இங்கே இனி என்ன நடக்கும்
சரவெடி தான் அங்கே வெடிக்கும்
                           ( எவன்டா…)
                           ( என்னை )

விட்டு விட்டோம்


எங்கள் தோட்டத்திலே !
மரம் நட்டோம்
செடி நட்டோம்
அவரைக்காய் கொடி நட்டோம்
எம்பெருமானே !
எங்கள் உள்ளத்திலே
நல்லெண்ணம் மட்டும்
நட்டுவிட மறந்துவிட்டோம் பெருமானே !

ஊரெல்லாம் கால்களை ஓட விட்டோம்
ஓடத்திலே கப்பல் விட்டோம்
சோகத்திலே கண்ணீர் விட்டோம்
அரைத்துண்டு பீடியிலே புகை விட்டோம்
எம்பெருமானே !
சுயநலத்தால் , உண்மையையும் சேர்த்து
விட்டு விட்டோம் பெருமானே !

வானத்திலே பறந்து விட்டோம்
நிலவுக்கே போய் விட்டோம்
உலகெங்கும் சுற்றி விட்டோம்
சாதனைகள் பல புரிந்து விட்டோம்
எம்பெருமானே !
ஆசைக்கு மட்டும்
அணை கட்ட மறந்து  விட்டோம் பெருமானே !

கோடி பணம் சேர்த்து விட்டோம்
கட்சி , மாநாடு கூட்டி விட்டோம்
கல்வித் தரம் உயர்த்தி விட்டோம்
சலுகைகள் பல கெடுத்து விட்டோம்
எம்பெருமானே !
வறுமையை மட்டும்
இன்னும் இருக்க விட்டோம் பெருமானே !

காலையிலே தூக்கம் விட்டோம்
வேலைக்கு ஓட்டம் விட்டோம்
நேரத்திற்கு உணவு மறந்து விட்டோம்
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து விட்டோம்
எம்பெருமானே !
உள்ளத்தில் நிம்மதியையும் விட்டு விட்டோம் பெருமானே !

இப்படியே
விட்டதெல்லாம் சேர்த்து விட
மறந்து விட்டோம் பெருமானே !              

கோதை நான் பெண்ணே


வருடலில் அலையும் காற்றில் – கண்ணா !
உன் குரல் கேட்கின்றேனே
சாரல் மழையில் விழும் துளியில் – கண்ணா !
உன் முகம் பார்கின்றேனே
தேன் பிறக்கும் மலரில்
உன் வாநம் தேடுகின்றேனே
உன்னில் என்னை காணும் – கண்ணா !
கோதை நான் பெண்ணே !

சித்திரமாய் நீ வந்திருப்பாய்
நான் பார்க்கும் போது நீ கண்ணிமைப்பாய்
மெல்லினமாய் நீ சிரிப்பாய்
நான் யாரிடமேனும் சொனனால் – என்னை
பேதையென  சொல்லச் செய்வாய்

குளியலரையில் தண்ணீராய்
நான் வரும் முன்பே நீ வந்திருப்பாய்
குழல் ஊதி நீ அழைப்பாய்
இசையாலே என்னை இழுப்பாய்
என் கண்ணத்தில் விழும் குழியை
கனவிலே வந்து நீ அணைப்பாய்
கண்ணா !
உன் விளையாட்டில்
கோதை நான்
பேதையாகி போனேனே !