Monday, 11 March 2013

நட்பு


நட்பென்பது எப்போ பூப்பது
இரவிலா பகலிலா
நட்பென்பது எங்கே பூப்பது
மனதிலா இதயத்திலா
ஒரு பூ
நட்பென்ற சின்ன பூ
வாசம் தந்தது
அந்த வாசம்
எங்களின் நேசம் சொன்னது
கல்லூரி நுழையும் போது
தென்றலாய் நட்பெங்களை தாலாட்டும்
இரு வரி கவிதை போல
சீராட்டும்

சின்ன சின்னதாய்
நட்பை சேமித்தோம்
சேமித்த நட்பையே
நாங்கள் சுவாசித்தோம்

எங்கள் கல்லூரி ஒரு
பூந்தோட்டமே
அந்த பூந்தோட்டத்தில் நாங்கள் தேன்கூட்டமே

சின்ன சின்ன கேலி கிண்டல் எல்லாம்
இங்கு சந்தோசம் தான்
இங்கு யார் மனதும் புண்படுவதில்லை
எல்லாமே வேடிக்கை தான்

நாங்கள் சண்டை போட மாட்டோம்
சண்டை போட்டாலும்
நட்பை மட்டும் விடவே மாட்டோம்

காலை , அது மாலை செல்லும் வேளை
உயிரோடு கலந்திடும் – நட்பு
என்றும் எங்கள் மத்தியிலே

எங்கே நாங்கள் சென்றாலும்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
எங்கள் கண்கள் பார்க்கும் போது
இதழில் புன்னகை பூக்குமே
இது எங்கள் நட்பின் நேசமே

சாலையோர பட்டாம்பூச்சி  நாங்கள்
சூரியனுக்கே  துண்டில் போடும் விண்மீனும் நாங்களே

உயிர் ஒன்றும் பெரிதில்லை
நண்பனுக்கு உதவையிலே
சோகம் நெஞ்சை தீண்டினால் – அன்னையாய்
நட்பு எங்கள் பக்கத்திலே

நட்பிலல்லா இடம் இங்கு , எங்கும் இல்லை
அப்படியும் இடம் இருந்தால்
அது ஒரு இடமே இல்லை .

லஞ்சம்


கோடி
கோடியான பின்னும்
பணப்பித்து தீரவில்லையடா
மானிடா உனக்கு
பணப்பித்து தீரவில்லையடா

லஞ்சம் வாங்க
உன் நெஞ்சத்தை
கழற்றி வைத்தாயோ

வஞ்சம் கொண்ட
கயவனைப் போல்
நீ லஞ்சம் வாங்கலாமா

நீ கண்மூடி
போன பின்னே நீயும்
மண்தானடா
நீயும் மண்தானடா

பணம் கொண்டு
பிணம் வாங்கலாம்
அப்பிணத்திற்கு
உயிர் தர முடியுமா

கல் நெஞ்சனுக்கு
கற்றவரென்ன
கயவரென்ன
லஞ்சம் வாங்க

முகமூடி போடாதடி காதலுக்கு


முகமூடி போடாதடி காதலுக்கு
விலையேதும் கேட்காதடி பார்ப்பதற்கு – உன்னை
நினைத்தாலே கொட்டுமடி தேன் எனக்கு – நெஞ்சில்
ஆயிரம் கனவுகள் உன்னோடு வாழ்வதற்கு
நான் போகும் பக்கம் எல்லாம் நீ தானே
நீ இல்லா வாழ்க்கை வீண் தானே
சாரலாய் நீ வந்து , காதலைத் தான் தந்து
கண் ஜாடை காட்டி நீயும் போகாதே
                           ( முகமூடி )
ஊரெல்லாம் சுற்றி வந்தேன்
தூரல் தான் இல்லை
நீ வந்த போது நனைந்தேன் பெண்ணே
உனைபோல ஒரு பெண்ணை நான் காணவில்லை
அதனாலே என் நெஞ்சம் உனை நீங்கவில்லை
காலங்கள் மாறிப் போனாலும் கூட
நான் கொண்ட காதல் மாறாதடி
என்னை தேடி வந்து பார்க்கிறாய் தேவதை போல
நீ பேச பேச மாறினேன் வானவில் போல
                           ( முகமூடி )
நண்பன் என்று சொல்லி
     ஆளை கொல்லும் கள்ளி
காதலுக்கு அணை கட்ட முடியாதே
ஆதாம் ஏவால் காலம்
     அது விட்டு போக கூடும்
நீ காதல் சொன்னால்
     காலம் மாறி கிடப்போமே
                          ( முகமூடி )

காரணமின்றியே கண்ணீர் வழிகிறதே


காரணமின்றியே கண்ணீர் வழிகிறதே
     உன் பூமுகம் பார்த்தால் உடனே மறைகிறதே
அன்பென்ற சொல்லை கேட்டாலே
     தாயே உன் முகமே தெரிகிறதே
உலகத்தின் அர்த்தம் பார்த்தாலே
     தாயே உன் நினைவே வருகிறதே
எந்நாளுமே எப்போதுமே
     உன் போல யார் தான் இங்குண்டு
                           ( காரணமின்றியே )

நீ காட்டும் அன்பிற்கு ஈடேதும் இல்லையம்மா
     நீ சொல்லும் ஒற்றை வார்த்தை உலகை மாற்றுமம்மா
நான் அழுதால் அழுவதற்கும்
     நான் சிரித்தால் சிரிப்பதற்கும்
உன்னை விட உலகினில் சொந்தம் ஏதும்
     இங்கே இல்லையம்மா
நீ நல்லவனா கெட்டவனா
     தாய் தான் பார்ப்பதில்லை
நீ எங்கிருந்தாலும் எதிரில் வந்தாலும்
     பாசம் குறைவதில்லை , தாயின் பாசம் குறைவதில்லை
( காரணமின்றியே )
விழியில் இமைபோலே
     என்னை காத்தாய் மடிமேலே
கருவில் நான் உதைத்தால் கூட
     சிரிப்பாய் மண்மேலே
சந்தோசம் என்பது தாய் தந்த வேதமே
     சங்கீதம் என்பது நீ பாடும் தாலாட்டே
என்ன செய்தாலும் தாய் பாசம் தீராதம்மா
     என்ன தந்தாலும் தாய்மைக்கு ஈடாகுமா
                           ( காரணமின்றியே )

சொல்லேதும் இல்ல


சொல்லேதும் இல்ல
எங்க ஆத்தா பத்தி சொல்ல
அம்மா போல வருமா
அவ ஆண்டவன் தந்த வரமா
சுத்தி எங்கும் பாசம் பாசம்
     தீராதிந்த தாய் நேசம்
எட்டுபட்டி நாட்டாமைக்கும்
     இருக்கவேணும் தாய் பாசம்
                           ( சொல்லேதும் )
ஆத்தா ஊட்டும் சோறு
     அதில் அமிர்தம் தோற்கும் பாரு
அது பாசம் நேசம் எல்லாம் சேர்ந்த
     கூட்டாஞ்சோறு
பஞ்சு மெத்தை எதற்கு
     அதில் பாசம் இல்ல ஒதுக்கு
தாய்மடியில் தானே சொர்க்கம் இருக்கு
                           ( சொல்லேதும் )
அம்மா அம்மா அம்மா
     நீ ஆயுள் தந்த தெய்வம்
உன் புன்னகையை பார்த்த போதும்
     என் சோகம் எல்லாம் மாறும்
புது உற்சாகம் நெஞ்சுக்குள்ளே பிறந்திடுமே

கல்ல மண்ண தூக்கிட்டு
     அக்கம் பக்கம் பாத்துகிட்டு
தாலாட்டு பாடுறது எதற்காக
     அவ பாடுபட்டு உழைப்பது உனக்காக
           இல்ல எனக்காக
                           ( சொல்லேதும் )

ஏ பெண்ணே நில்லு


ஏ பெண்ணே நில்லு உன் பெயர் சொல்லு போகாதே
உன் கண்ணில் காந்தம் வைத்து என்னை ஈர்க்காதே
இத்தனை வருடம் இத்தனை நாட்கள் இத்தனை நிமிடம்
உனக்காகத் தான் காத்துக் கிடந்தேனா
என் இருபது வயதில் இதயம் தொலைத்தேன்
உன்னை கண்டு நானும் தொலைந்தேன் சரிதானா

( இந்த பசங்களே இப்படிதான் முதன் முதல்ல பொண்ண
பாத்தா போதும் மெலோடியா பாடி கொல்ராங்க
டியுன( tune ) மாத்துங்கடா சாமி )

நீ ஒரு பார்வை பார்த்தால் போதும்
     என் காதல் பஞ்சம் தீரும்
நீயும் நானும் சேர்ந்தால்
     புது காதல் கலையே தோன்றும்

பெண்ணே !
உன்னை பார்த்த பின்னே என் விழிரெண்டும்
     எப்போதும் உன் பின்னே அலையுதடி
கண்ணால் உன் பெயர் சொன்னால்
     உன் முத்துக்கள் உதிராதடி

உங்க அப்பா என்ன பில்கேட்ஸா
     உங்க அம்மா கிளியோபாட்ராவா
ஏன்டி நீயும் ரொம்ப பிளிமு காட்டுர
     என்ன நீயும் ரொம்ப அலட்சிய படுத்துற
அடியே அடியே நீ செல்லம்
     அடிக்கடி துடிக்குது என் உள்ளம்

பேப்பர் போல என்ன கிழிச்சு போடாதே
     பெப்பர் போல என்ன சந்துல வீசாதே
                                ( அடியே )
எப்எம் ரேடியோ போல என்ன கத்த விட்டயேடி
     தெரு நாய் போல உன் பின்னே சுத்தவிட்டயடி
சரியா சரியா
நீ செய்வது முறையா முறையா
உன்ன விட்டா ஆளு இருக்கு
அத்த பொண்ணு காத்திருக்கு
( இதுக்கு மேல பாட முடியாதுறா சாமி Escape ) 

கைகள் தொடும் முன்னே தொடுவானம்


கைகள் தொடும் முன்னே தொடுவானம்
     தொலைவினில் போவது ஏன் தானோ
இலையுதிர் காலம் இதுதானோ
     இருந்தவன் வீழ்ந்ததும் முறைதானா
கண்ணீர் துளிகள் புல்லுக்கும் வருதே
     காலையில் பனித் துளியாக
நீ இருந்ததும் கொஞ்சம் நிறைந்ததே நெஞ்சம்
     பூமிக்கு நீ மகனாக
இருந்தால் இருக்கணும் உனை போல
வலியிலும் சிரிக்கனும் தாய் போல
உன் வாழ்க்கை உலகுக்கு நீர் போல
      நீர் போல
                          ( கைகள் )
நீ விதையென விழுந்ததும்
     செடியென முளைப்பதும் உந்தன் விதி வினையா
           இல்லை இறைவன் சதி வலையா
                           ( கைகள் )